தெற்கு பிரேசிலில் உள்ள குவைபா நகரில், பலத்த சூறாவளி காற்று காரணமாக அங்குள்ள ஒரு மெகா ஸ்டோரின் முன்னால் வைக்கப்பட்டிருந்த 24 மீட்டர் உயரமுள்ள ‘சுதந்திர தேவி’ சிலையின் மாதிரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ஹாவன் என்ற பிரபல சில்லறை விற்பனை நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் சிலையானது, திங்கள் கிழமை மதியம் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் வீசிய கடுமையான காற்றினால் நிலைதடுமாறி வாகன நிறுத்துமிடத்தில் சரிந்தது.

இந்த சிலிர்ப்பூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன. இந்த விபத்து நடப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாகவே, அப்பகுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை அப்புறப்படுத்தியதால் பெரும் உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ தவிர்க்கப்பட்டது.

“>

2020-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பிரம்மாண்ட சிலையின் அடித்தளம் உறுதியாக இருந்தபோதிலும், காற்றின் வேகம் தாங்காமல் அது சரிந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அந்நிறுவனம், இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் உயரமான கட்டுமானங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.