சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் Paytm மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பதற்கான புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது இந்த புதிய முறை சென்னை மெட்ரோ பயணிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து Paytm செயலியில் transit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மெட்ரோ ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் இடத்தை பதிவிட்டு டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இதில் முதல் பதிவின்போது அதிகபட்சமாக ஆறு டிக்கெட் வரை பெறலாம் எனவும் Paytm மூலம் டிக்கெட்டை எடுக்கும் போது 25 சதவீதம் கட்டண தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.