தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் கட்டுமான ஒப்பந்த கட்டணமாக தனியாக நான்கு சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய கட்டண விகிதங்களை உடனடியாக அமல்படுத்தும் விதமாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பதிவுத்துறை ஐஜிக்கு வணிகத்துறை மற்றும் பதிவுத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.