தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக வாழ்வாதார இயக்க மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஆகஸ்ட் 5ஆம் தேதி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

அதனைப் போலவே சேலத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மதுரையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற இணையதள பக்கத்தில் சுயவிவரத்தை பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.