தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். மேலும் மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் கதவுகள் மூடப்படும் போது பேக் அல்லது வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை வைத்து அதனை திறக்க வைத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அடுத்தடுத்த ரயில் வரும் நேரத்தில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே ரயில் கதவுகள் மூடப்பட்டவுடன் கதவுகளை திறக்க முயற்சிப்பது அல்லது தானியங்கி கதவுகள் மூடும் போது ஏதாவது பொருட்களை தூக்கி வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடு க்கப்படும்.