போபாலில் 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் 49 வயது பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் தன் வயதில் பாதி வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவியை இழந்த நாசர், கணவனை இழந்த ஃபிரோஸ் ஜஹானைத் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.