இந்தியாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிஎம் கிஷான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8000 அல்லது 9000 ரூபாய் வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

தற்போது விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை உயர்த்தப்பட்டு நான்கு தவணையாக ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண் விவசாயிகளுக்கும் இந்த ஆண்டு 12000 ரூபாய் வரை நிதித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.