கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பால் 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்துவருவதாகவும், 3 நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்பவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.