தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு தொடர்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான எண் எம் எம் எஸ் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 20ஆம் தேதி உடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு ஆண்டில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதிதாகவும்,முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்கள் விண்ணப்பங்களை இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உதவித்தொகை வங்கி கணக்கில் சென்றடைய ஏதுவாக ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.