
தமிழக அரசின் கட்டணமில்லா ஆன்மீக பயணத்தில் 60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்கள் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீகப் பயணத்தில் ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்படுவர்.
விருப்பமுள்ளவர்கள் அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோவில் அலுவலகங்கள் மற்றும் hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதனை உரிய சான்றுடன் ஜூலை 17ஆம் தேதி இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.