விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் குறித்து சமீப காலமாகவே பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அவர் குறித்து பல அவதூறான கருத்துக்களையும் சிலர் பரப்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஈரப் போராட்டத்திற்காக பாடுபட்ட உயிர் நீத்த பிரபாகரன் குறித்து வேறு வேறு தலைப்புகளில் பேசப்பட்டு வருவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் அது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. சீமான் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர். நானும் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டேன். நாகரிகம் கருதி அவர் பற்றிய எந்த ஒரு கருத்துக்களையும் கூறாமல் நான் தவிர்த்து செல்கின்றேன். பிரபாகரனை மூச்சுக்கு 300 முறை தலைவர் என்று சீமான் கூறுவதால் அவரை எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் நான் கடந்து செல்ல விரும்புகிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.