தமிழக வாழ்வுரிமை கட்சி பற்றியும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். அதில், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பிற கட்சிகளில் இருந்து ஆட்களை பிடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் மனதில் கிடையாது. அதுபோலத்தான் மற்ற கட்சிகளை பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் நாங்கள் ஒருபோதும் செயல்பட்டது இல்லை.

மற்ற கட்சிகளில் இருக்கக்கூடியவர்கள் பல காரணங்களால் விளங்கி பல மாதங்கள் காத்திருந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் இணைந்து கொள்ளலாம் என்று ஆழ்ந்த ஆராய்ந்து பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். என்னை தொடர்பு கொண்டு சந்தித்து என்னுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக பலரும் என்னிடம் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கட்சியில் இணைவதற்காக நான் இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்தது கிடையாது.

எங்கள் கட்சியில் இணைவதற்காக அவர்களை செலவு செய்து கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றன. தற்போது தேர்தல் காலத்தில் வெற்றியை இலக்காக வைத்துக் கொண்டுதான் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்கின்ற அடிப்படையில் திராவிட கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.