சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலான காணொளி ஒன்று நெட்டிசன்களை சிரிக்க வைத்ததுடன் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. அந்த காணொளியில் நாய் ஒன்று கட்டட பணி நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏற முயற்சிக்கிறது.

முயற்சி செய்து முயற்சி செய்து ஏணியில் ஏற முடியாமல் கீழே இறங்கி விடுகிறது. ஆனால் விடாமுயற்சியால் ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக நாய் ஏணி வழியாக ஏறி மேலே சென்று விடுகிறது. இந்த காணொளி நெட்டிசன்களுக்கு விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது.

https://www.instagram.com/reel/DCOUK3JspT3/