2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் 15 வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இதற்கு காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து டெல்லியில் செயல்பட்டு வரும் இஸ்ரேல் தூதராகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் வலியுறுத்தல் இல்லாமலேயே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு கொடூரமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.