ஹவாய் தீவில் உள்ள விமானப் படைத்தளத்தில் ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது பாதை மாறி கடலில் பாய்ந்தது. கடற்கரைக்கு அருகில் விமானம் தரை இறங்கியதால் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துள்ளது. விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்களும் தண்ணீரில் குதித்து நீந்தி பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளனர்.

இதனால் எந்த வீரருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் பாதை மாறியதற்கான காரணம் குறித்து காரணம் கண்டறிய படாத நிலையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான வல்லுனரான பீட்டர் போர்மேன் கூறுகையில் “மோசமான வானிலையும் சிறிய ஓடுதள பாதையும் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் அல்லது விமானி விமானத்தை தரையிறக்க தொடங்க வேண்டிய இடத்தை தவற விட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.