இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.

அவர்களை மீட்கும் பொருட்டு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி இன்று வரை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் கிப்ருட் நகரில் நடந்து கொண்டிருந்த நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஹமாஸ் அமைப்பை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர்.

அவர்களில் இளம் பெண் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் சுற்றி வளைத்ததும் அவர் மண்டியிட்டு தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் ஹமாஸ் பயங்கரவாதி ஒருவர் இரக்கமின்றி அந்த பெண்ணை சுட்டு கொலை செய்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.