இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருவதால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது காசா மக்கள் தான். இது குறித்து ஐநா தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில் ஐநாவின் உணவு அமைப்பு காசாவில் தற்போது 22 லட்சம் பேர் உணவின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளது.

அங்குள்ள மக்கள் உணவின்றி எரிபொருள் இன்றி தவித்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.