இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது 15 ஆண்டுகால நெடிய பயணத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய அவர், அன்று முதல் இன்று வரை அந்த அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறார்.
மும்பை அணிக்காக 230-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி சுமார் 6,000 ரன்களைக் குவித்துள்ள ரோகித், அந்த அணிக்காக அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். ஒரு கேப்டனாகவும் ரோகித் சர்மா மும்பை அணியை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றார்.
அவரது சிறப்பான தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடக்கத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போதிலும், மும்பை அணியில் இணைந்த பிறகே அவர் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்தார். 15 ஆண்டுகளாக மும்பை அணியுடன் நீடித்த இந்த உணர்ச்சிகரமான பயணம் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
