ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்த நிலையில் அந்த அணி 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கோட்சி முதலில் பந்து வீசும் போது ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து வருகிறார். இதனால் இரண்டாவது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இது ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிக்கு உதாரணம் என்று விமர்சித்துள்ளார்.