விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி எனும் தொடர் வாயிலாக அதிகம் பிரபலமானவர் தான் நடிகர் கவின். இதையடுத்து கவின் சினிமாவில் சின்ன சின்ன ரோல்கள் நடித்துவந்த நிலையில், பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றார். தற்போது வெள்ளித் திரையில் Lift, டாடா ஆகிய படங்களில் நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்களின் நாயகனாக வலம் வருகிறார்.

இந்த படங்களின் வெற்றிக்கு பின் ஒரு படத்துக்காக ரூ.1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம் கவின். இதன் வாயிலாக அவருக்கு வருடத்திற்கு ரூ.1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். அதன்படி அவரின் சொத்து மதிப்பானது சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று  சொல்லப்படுகிறது. அதேபோன்று சென்னையில் ஒரு பிளாட் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதுதவிர்த்து கவின் சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார்.