பெற்றோர்களைப் பாரமாக நினைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், உடல்நலக்குறைவால் அவதிப்படும் தனது தந்தை கார் ஏறுவதற்கு சிரமப்படுவதைக் கண்ட மகன் செய்த நெகிழ்ச்சியான செயல் இணையத்தில் பலரது கண்களையும் கசிய வைத்துள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், கால்களை மடக்க முடியாமல் தவிக்கும் தனது தந்தை உயரமான காரில் ஏறுவதற்கு ஏதுவாக, அந்த மகன் யோசிக்காமல் சாலையிலேயே மல்லாக்கப் படுத்துக் கொள்கிறார். தனது முதுகையே ஒரு படிக்கட்டாக (Step) மாற்றி, தந்தை அதன் மீது கால் வைத்து மெதுவாகக் காரில் ஏற அந்த மகன் உதவுகிறார்.

“>

 

“சில நேரங்களில் மகன்களே தந்தைக்குத் தூணாக மாறுகிறார்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, உண்மையான பாசத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் இலக்கணமாக அமைந்து, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.