ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் முதியோர் உதவி தொகை நிறுத்தப்படும் என்ற தகவல் இணையத்தில் பரவிய நிலையில் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். சமீபத்தில் ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அரிசி கிடையாது எனவும் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.