இந்தியாவில் ரயில் சேவை கட்டணத்தில் முதியவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் பாதி கட்டணம் வசூலிக்கப்பட்ட வந்தது. இது கொரோனா காலத்தில் ரத்து செய்து முழு கட்டணத்தையும் வசூலித்தது. தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் முதியவர்களுக்கான ரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் பயணிகளுக்கு 100 ரூபாய் மதிப்பிலான டிக்கெட் 55 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே இதனால் மீண்டும் சலுகை கட்டணம் அமலுக்கு வராது என கூறப்படுகிறது. இருந்தாலும் புற்றுநோய் போன்ற சில தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் வழங்கப்படும் கட்டண சலுகைகள் தொடரும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.