டெல்லியில் தொடர்ந்து மாசு கடுமையாக உள்ளது. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிக மாசுபாடு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை ஆன்லைன் வழியாக நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை தெளித்து வருகிறார்கள். இதன் மூலம் காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது.