சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், முதியவர் ஒருவர் மூங்கிலால் செய்யப்பட்ட எளிய இசைக்கருவியைக் கொண்டு பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடல்களை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எவ்வித ஆடம்பரமான மேடையோ அல்லது விலையுயர்ந்த இசைக்கருவிகளோ இன்றி, சாலையோரமே அமர்ந்து அவர் வாசித்த அந்த இனிமையான இசை பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.
மேலும் குறிப்பாக, கிஷோர் குமாரின் ‘செஹ்ரா ஹை யா சந்த் கிலா ஹை’ மற்றும் ஷாருக்கானின் ‘குச் குச் ஹோதா ஹை’ ஆகிய பாடல்களின் மெட்டுகளை அவர் தத்ரூபமாக மீட்டிய விதம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
ना कोई मंच, ना स्पॉटलाइट। सड़क किनारे बैठा एक गरीब संगीतकार अपने हाथ से बने लकड़ी के वाद्य यंत्र से बॉलीवुड धुनें बजाकर लोगों को हैरान कर देता है।
यह साबित करता है कि सच्ची प्रतिभा दिल से निकलती है और कहीं भी मिल सकती है। pic.twitter.com/NLVKOE314T
— JIMMY (@Jimmyy__02) December 21, 2025
“>
இந்நிலையில் “உண்மையான திறமைக்கு எந்த அடையாளமும் மேடையும் தேவையில்லை, அது இதயத்திலிருந்து வெளிப்படுவது” என நெட்டிசன்கள் பலரும் அந்த முதியவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். வறுமையான சூழலிலும் கலையின் மீதான அவரது காதலும், அவர் வசமாக வைத்திருக்கும் அந்த அபாரமான திறமையும் இக்கால இசைக்கலைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
