தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயாளு அம்மாளுக்கு (90) நேற்று திடீரென்று உடல்நலக் குறைவை ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவருடன் குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர்.