தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென தலைசுற்றலால் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு முழுமையான பரிசோதனைகள் செய்ததில், தலைசுற்றலுக்கான காரணம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, இதயத்துடிப்பில் சிறிய மாற்றங்கள் காணப்பட்டதால், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ சிகிச்சைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உடல்நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் இரு நாட்களில் மீண்டும் வழக்கமான அரசு பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சர் வீடு திரும்பவுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடம் இல்லை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.