வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ” அமித்ஷா தமிழக மண்ணிற்கு வர ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்தவுடன் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று இருந்து காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டது. அமித்ஷா வரும்போது லைட்டை வேண்டுமானால் அணைக்கலாம். ஆனால் தொண்டர்களின் உற்சாகத்தை எப்போதும் அணைக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.