
நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம், மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையாகும். நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவருமே இதனை பாராட்டி வருகிறார்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லவில்லை என்று தமிழக முதல்வர் கூறுகிறார்.
இதனை அவர் வெளியிட்ட அறிக்கையாக நான் பார்க்கவில்லை, 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கையாக தான் நான் அதை பார்க்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை, மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்று சொல்வதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே இப்படி ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளார் என கே பி ராமலிங்கம் கூறியுள்ளார்.