கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள் விபரங்களை வெளியிட்டு இருந்தார்.

அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சுமார் ரூ.6 கோடி கடன் இருப்பதாகவும் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தனது பெயரில் ரூ.49.70 கோடி சொத்தும், மொத்தமாக தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ரூ.52.12 கோடி சொத்தும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.