மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகினார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஏப். 16) காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகினார். தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்த மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. சென்ற 2021-22 ஆம் வருடம் அரசால் வெளியிடப்பட்ட புது மதுபானக் கொள்கையிலுள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், இதனால் சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சென்ற பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, சிபிஐ கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன். தான் எந்த தவறும் செய்யாததால் மறைக்க எதுவுமில்லை. என்னை கைது செய்ய சிபிஐக்கு பாஜக உத்தரவிடப்பட்டு இருப்பது போன்று தெரிகிறது. நாட்டில் யாரையும் சிறையில் தள்ளும் சக்தி அவர்களுக்கு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.