கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதால் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை சிறுவர்கள், கர்ப்பிணிகள். முதியோர் வீட்டை வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளது. தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.