பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பொதுவாக அனைவரும் லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த் தான் விரும்புவார்கள். அது இறங்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜன்னல் போன்ற வசதிகளும் இருக்கும். ஆனால் இந்த இருக்கை பெரும்பாலும் முன் பதிவு செய்ய முடியாமல் போகும். ரயில்களில் சீட் ஒதுக்கீடு என்பது பேருந்து தேர்வுகளைப் போல இல்லை.

நாம் விரும்பிய இருக்கைகளை தேர்வு செய்ய முடியாது. இந்த நிலையில் இருக்கை தொடர்பான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி ரயிலின் கீழ் பெர்த்தில் சில வகை மக்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும். ரயிலின் கீழ் இருக்கை யாருக்கும் கிடைக்கும் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.

அவர்களின் பயணத்தை மேலும் எளிமையாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்குகள், இரண்டு கீழ் பெர்த் ஒதுக்கப்படுகிறது. மூன்றாவது ஏசி பெட்டியில் 2 இருக்கைகள், ஏசி 3 எகானமியில 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி களும் அவர்களோடு பயணம் செய்பவர்களும் அமரலாம்.