
பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” நடை பயணத்தை மேற்கொண்டார். அங்கு நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் தான் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு பேசிய அவர், தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறியிருக்கிறார்.