தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பலரும் தங்களது பகுதியில் இருப்பவர்களில் பலருக்கு தகுதி இல்லாமல் உரிமை தொகை வந்துள்ளதாகவும் தங்களுக்கு தகுதி இருந்து உரிமை தொகை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ள நிலையில் தனது கவனம் முழுவதும் உரிமைத்தொகை திட்டம் இது இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு அனைவருக்கும் சரியாக பணம் சென்று உள்ளதா என்றும் எந்த பகுதியில் எந்த காரணத்துக்காக பலருக்கு கிடைக்கவில்லை என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.