தமிழகத்தின் தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரபல வின்ஃபாஸ்ட் (VinFast) கார் உற்பத்தி ஆலை, உற்பத்தி தொடங்கப்பட்ட ஒரே ஆண்டிற்குள்ளாகவே 10,000 மின்சாரக் கார்களை வெற்றிகரமாகத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த ஆலையின் கார் உற்பத்திப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 10,000 கார்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ள இந்த ஆலை, தற்பொழுது அடுத்த கட்டமாக ஆண்டிற்கு 1.50 லட்சம் கார்களைத் தயாரிக்கும் வகையில் தங்களது தொழிற்சாலையை பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யும் பணிகளில் படுதீவிரமாக இறங்கியுள்ளது.

தென் தமிழகத்தின் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் வகையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் நிகழ்த்தியுள்ள இந்த மெகா உற்பத்திச் சாதனை நியூஸ், தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி செம வைரலாகி வருகிறது.