கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மேலும் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்று கே.சி.வேணு கோபால் தன் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வருகிற மே 20-ம் தேதி பதவியேற்கின்றனர். பதவியேற்பு விழா பெங்களூரில் மே 20ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.