வங்கியை தவிர்த்து அஞ்சல் அலுவலகத்திலும் ஆர்டி விருப்பம் கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஆர்டி-ன் மிகப் பெரிய நன்மை என்னவெனில் நீங்கள் அதை ரூ.100 என்ற குறைந்த தொகை கொண்டும் துவங்கலாம். பணத்தை சேமிக்க இயலாதவர்கள் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் இதில் முதலீடு செய்யலாம். இப்போது தபால் அலுவலக ஆர்டி-க்கு 6.2% வட்டி பெறப்படுகிறது. அஞ்சல் அலுவலகத்தில் ஆர்டி திட்டமானது 5 வருடங்களுக்கு துவங்கப்படுகிறது.

அதன்படி, ஒரு முறை திட்டத்தில் முதலீடு செய்ய துவங்கினால், நீங்கள் தொடர்ந்து 5 வருடங்களுக்கு முதலீடு செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் மாதந்தோறும் ரூ.100 போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்வதன் மூலம், வருடத்திற்கு ரூ.1200 டெபாசிட் செய்து 5 வருடங்களில் மொத்தம் ரூ.6000 முதலீடு செய்வீர்கள். இந்நிலையில் 6.2% வட்டியின் படி உங்களுக்கு ரூ.1043 மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் 5 வருடங்களுக் குபின், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6000 ஆகும். இது வட்டியோடு சேர்த்து, மொத்தம் ரூ.7043 ஆக கிடைக்கும்.