தமிழகத்தின் முட்டை உற்பத்தியின் மையமான நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முட்டை ஒன்றுக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு, அதன் விலை 5 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாகச் சென்னையில் ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 90 காசுகளாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ள சூழலில், இந்த விலை உயர்வு சாதாரண மக்களிடையே கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பாளர் தினமான மே 1-ஆம் தேதி (01.05.2026) அன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, முட்டை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.