தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், கல்லூரிகளில் புதிதாகச் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டவும் உதவி செய்யவும் திமுக மாணவர் அணி சார்பில் புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ‘HELP DESK’ என்ற சிறப்பு சேவைத் திட்டத்தைத் திமுக அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (02.05.2026) இந்த உதவி மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், கல்லூரி அட்மிஷன் நேரத்தில் மாணவர்களுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.