அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், அதிமுகவின் எதிர்கால பாதை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மக்கள் நலனுக்காகவும், இயக்கம் வலுப்பெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன்” எனவும் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

அதேபோல், அதிமுகவில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அமித்ஷாவிடம் முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். கட்சி வலுப்பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்திய செங்கோட்டையன், தனது அரசியல் நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.