அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தான் காயமடைந்ததாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா காமேனி மிக ஆக்ரோஷமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எதிரிகளின் எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் அஞ்சாது என்றும், தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் தாக்குதல் தொடரும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
“நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை, எங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இறுதிவரைப் போராடுவோம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பதவியேற்ற சில நாட்களிலேயே புதிய தலைவர் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை, உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
