பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபுதேவா உடன் மின்சார கனவு திரைப்படத்தில் கஜோல்  நடித்து உள்ளார். வேலையில்லா பட்டதாரி-2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில்  நடிகை கஜோல், முக அழகுக்காக தோல் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சூரிய ஒளியிலிருந்து தள்ளி இருப்பதே தனது அழகுக்கு காரணம் என 2014லேயே விளக்கமளித்தார். இந்நிலையில், முகம் முழுவதும் மூடும் மாஸ்க் அணிந்திருக்கும் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், எனது அழகை கேள்வி கேட்போருக்கான பதில் இதுதான் என்று நச்சென்று பதிலளித்துள்ளார்.