தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீசாகிறது. அதன்பிறகு பிச்சைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ஸ்னீக் பீக் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். மேலும் இந்த  டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.