தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய அனைத்து மாவட்ட ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளாராம். மேலும் நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.