தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஒரு சிறுவனின் வீட்டிற்கு ஒருவர் சென்று, சிறுவன் விஜயைப் பார்க்கச் சென்றதைப் பற்றி விசாரிக்கிறார். சிறுவனின் தந்தை, விஜய் வருவது தனக்குத் தெரியாது என்றும், தான் வேலைக்குச் சென்றிருந்தபோது மகனை யாரோ அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்.
View this post on Instagram
உடனே கேள்வி கேட்டவர், உங்களுக்கு தெரிந்திருந்தால் மகனை அனுப்பியிருக்க மாட்டீர்களா என்று கேட்கிறார். இதற்குப் பதிலாக, சிறுவனின் தந்தை “தெரிந்திருந்தால் நானும் சென்றிருப்பேன்” என்று விரைவாகப் பதிலளித்து முடித்துவிடுகிறார். இந்த விரைந்த பதில் கேள்வி கேட்டவரையும் பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு, பலரிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
