நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004-ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட்டு புது ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. எனினும் புது ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டம் தான் அமலுக்கு வர வேண்டும் என அனைத்து தரப்பு ஊழியர்களும் கோரிக்கை விடுத்தது வந்தனர்.

கடந்த 2022 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்று பூபேஷ் பாகேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் (அ) புது ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்த 84% ஊழியர்களுக்கு அதை அமல்படுத்த மத்திய அரசிடம் 2004 முதல் 2022ம் ஆண்டு வரை செலுத்திய ஓய்வூதிய தொகை ரூ.17,000-ஐ திருப்பி செலுத்த மத்திய அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஊழியர்கள் அனைவரும் இப்போது செய்வதறியாமல் சிக்கலில் தவிக்கின்றனர்.