மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதோடு வாட்ஸ்அப் செயலியின் வாயிலாகவே தேவையில்லாத பல கருத்துக்கள் பரவுவதன் காரணமாக இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் பயனர்களின் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த ரஷ்யா உக்ரைன் போரின்போது ரஷ்யா கடும் ராணுவ தணிக்கை விதிகளை அமல்படுத்தியது. இச்சட்டத்தின் படி ரஷ்ய ராணுவ தணிக்கை விதிகளை பரப்பும் google, விக்கிபீடியா உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் இந்த தடைசெய்யப்பட்ட ரஷ்யாவின் ராணுவ தணிக்கை விதிகளை அகற்றவில்லை என்று இப்போது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 4 மில்லியன் ரூபிள் வரை அதாவது ரூ.41,42,586 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.