தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். இவர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2012ம் வருடம் வெளியாகிய சுந்தர பாண்டியன் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் இவர் கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். அண்மை காலமாக இவர் பட வாய்ப்புகள் இன்றி இருந்து வருகிறார்.

இப்போது லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ஆம் பாகம் உருவாகிறது. இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு, கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் லட்சுமி மேனன் இணைந்து உள்ளார். இந்த படத்தின் வாயிலாக அவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.