தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது தளபதி விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

அதன்படி ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை லோகேஷ் கனகராஜ் தற்போது சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலில் தன்னுடைய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கும் படத்தை தான் தயாரிக்கிறாராம். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு ஃப்ளோரை மிகப் பெரிய தொகைக்கு லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ளதாகவும் அந்த அப்பார்ட்மெண்டில் ஹைடெக் காண ஆஃபீஸை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தளபதி விஜய் தனக்காக ஒரு ஹைடெக் ஆன ஆபீஸை கட்டியது போன்று லோகேஷ் கனகராஜும் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.